உள்ளூர் செய்திகள்
பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி.

புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-05-12 09:45 GMT   |   Update On 2022-05-12 09:45 GMT
இடையிறுப்பு ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:

அம்மாபேட்டை ஒன்றியம், இடையிறுப்பு ஊராட்சியில் உள்ள இடையிறுப்பு ஆதிதிரா விடர் தெருவாசிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலைகுடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்ததால் தண்ணீரை டேங்கில் சேமித்து வைத்துகிராம மக்களுக்கு தேவைப்படு ம்போது விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 3 வருடமாக குடிநீர் டேங்க் பயன்பாடு இன்றி உள்ளது. 

அதனால் கிராமமக்க ளுக்கு குடிநீர் மற்றும் இதர தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. 

கிராம மக்களின் சிரமத்தை அரசு உணர்ந்து இடையிறுப்பு ஆதிதிராவிடர் தெருவாசி களுக்கு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி (டேங்க்) அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News