உள்ளூர் செய்திகள்
ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-05-12 09:23 GMT   |   Update On 2022-05-12 09:23 GMT
தஞ்சை ரயிலடி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:

தஞ்சையில் பல ஆண்டுகளாக மக்களால் பூஜிக்கப்பட்டு வரும் ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும்  நடை பெறுவது வழக்கம். அதிலும் புரட்டாசி மற்றும் மார்கழி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் திரளாக வந்து வழிபடுவது வழக்கம்.

துளசி, வடைமாலை சாத்தும் நிகழ்ச்சிகளும் பக்தர்களால் வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது. புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி, புதிய வாகனம், வீடு மற்றும் இதர வைபவங்களாக இருந்தாலும் சரி, ஆஞ்சநேயர் அருளாசி வழங்க பக்தர்கள் வரம் வேண்டுவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரசித்தி பெற்ற தஞ்சை ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 6 மணிமுதல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும்,விழாக்கு ழுவினரும் சிறப்பாக செய்து வருகி ன்றனர். அரசின் கொரோனா வழிகாட்டுதல் படி விழா நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News