உள்ளூர் செய்திகள்
.

பா.ஜ.க. இளைஞரணி சுஷாசன் யாத்ரா பயிற்சி மாநாடு

Update: 2022-05-11 10:22 GMT
பா.ஜ.க. இளைஞரணி சுஷாசன் யாத்ரா பயிற்சி மாநாடு நடந்தது.
வாழப்பாடி: 

பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேதஸ்வி சூர்யா தலைமையில்,இந்தியாவில் 3 மாநிலங்களில் சுஷாசன் யாத்ரா மாநாடு அண்மையில் நடைபெற்றது. 

உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹரிதுவார் பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பாஜக தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் அபிநவ் பிரகாஷ் மற்றும் நேகா ஜோஷி ஆகியோர் தலைமை வகித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்து கலந்துரையாடினர். கட்சியின் வளர்ச்சி மற்றும் அரசியல் செய்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த மாநாட்டில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், தமிழகத்தில் இருந்து இளைஞரணி நிர்வாகிகள் வாழப்பாடி குணசேகரன், சூர்யா பெரியசாமி, கார்த்திக் ஆகியோர் பங்கேற்று பயிற்சி பெற்று திரும்பினர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News