உள்ளூர் செய்திகள்
இருளில் மூழ்கிய ஏ.டி.எம்.

முக்கூடல் ஏ.டி.எம். மில் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிப்பு

Published On 2022-05-11 10:10 GMT   |   Update On 2022-05-11 10:10 GMT
முக்கூடல் ஏ.டி.எம். மையத்திற்கு மின்சார கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் சொக்கலால்புரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். அமைந்துள்ளது.

இந்த ஏ.டி.எம். எந்திரத்தின் மூலம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பயன்அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்து உள்ளது.

மேலும் அந்த அறையில் மின்விளக்குகளும் எரியவில்லை. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுதொடர்பாக வங்கி கிளையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 2 நாட்களாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிலர் முக்கூடலில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை.

இதன் காரணமாக அங்கு மின் இணைப்ளை துண்டித்துள்ளோம் என்று கூறி உள்ளனர். இதனை கேட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


 வியாபாரிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த ஏ.டி.எம். எந்திர அறைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏ.டி.எம்.ஐ சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வங்கி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News