உள்ளூர் செய்திகள்
எர்ணாவூர் நாராயணன்

நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை தமிழக அரசுக்கு- எர்ணாவூர் நாராயணன் புகழாரம்

Update: 2022-05-07 10:18 GMT
பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளமான நிலைக்கு அழைத்துச் சென்று இன்று ஓராண்டில் நூறாண்டு சாதனை படைத்த தமிழக அரசுக்கு எர்ணாவூர் நாராயணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை:

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு பதவியேற்ற ஒரு ஆண்டுக்குள் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சாமானிய மக்களும் பயன்பெறும் வழியில் இந்தியா மட்டுமல்ல உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தொழில் வளர்ச்சியை முன்னேற்ற பாதையில் தமிழகத்தை வழி நடத்தி செய்துவரும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம், கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், ஒரு லட்சம் பேருக்கு விவசாய மின் இணைப்பு திட்டம், பனை நலன் பாதுகாப்பு திட்டம், பழங்குடியினர் நலன், தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கு தான் அதிக வேலைவாய்ப்பு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளமான நிலைக்கு அழைத்துச் சென்று இன்று ஓராண்டில் நூறாண்டு சாதனை, வரும் காலங்களில் பல திட்டங்கள் அறிவித்து பல நூறாண்டு சாதனையாக திகழ தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News