search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எர்ணாவூர் நாராயணன்"

    • தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் இந்த விதையானது செப்டம்பர் மாதம் 24 - ந் தேதி என்.எஸ் எஸ். தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.

    இன்று இந்த திட்டத்தின் ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டையில் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, கொள்கை பரப்புச் செயலாளர் முனீஸ்வரன், வர்த்தகர் அணி செயலாளர் சுப்பையா, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, சமூக முன்னெடுப்பு தலைவர் மற்றும் தமிழ்நாடு தன்னார்வளர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், நாடார் பேரவை மாநில துணைத் தலைவர் முருகேசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் கண்ணன், பால சேகர், நாடார் பேரவை மகளிர் அணி துணைச் செயலாளர் கல்பனா,

    திருவள்ளூர் மாவட்டம் மீனா ராஜபுஷ்பம் கலையரசி வடசென்னை மாவட்டம் குணசுந்தரி ஆனந்தி விஜயலட்சுமி அனிதா வடசென்னை கிழக்கு மாவட்டம் லார்டு பாஸ்கர் கே கே சீனிவாசன் தங்கத்துரை ராஜேஷ் வட சென்னை மேற்கு மாவட்டம் வில்லியம்ஸ் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மதுரை வீரன் கிழக்கு மாவட்டம் விஜயன் திருவள்ளூர் அந்தோணி சுபாஷ் சுரேஷ் காஞ்சிபுரம் ரமேஷ் செல்வ ராஜ் ஸ்ரீராம் செங்கல்பட்டு சேகர் தென் சென்னை துரை மாணிக்கம் மத்திய சென்னை தேவேந்திரன் அருண்குமார் ராஜலிங்கம் ஈரோடு கோதண்டராமன் தஞ்சாவூர் செல்லதுரை கனகராஜ் விருதுநகர் மாரிமுத்து கரூர் ரமேஷ் மணி திருவாரூர் காளிமுத்து திருப்பூர் ஆத்திச்செல்வம் விழுப்புரம் முருகன் திண்டுக்கல் குரு பாண்டியன் தேனி சுரேஷ் காரைக்கால் விஜய் திருச்செங்கோடு சுரேஷ் பூமணி மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து நாடார் பேரவை சமத்துவ மக்கள் கழகத்தினுடைய நிர்வாகிகள் பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், சென்னையில் பொது மக்களுக்கு 50 - க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், உபகரண பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நங்கநல்லூர் நேரு ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ராயபுரம் ஜி. ஏ. ரோட்டில் அமைந்து உள்ள காமராஜர் சிலை, திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு திருவொற்றியூர் நாடார் உறவின்முறை சார்பில் பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுபாஷ் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் 121 கிலோ எடை கொண்ட மெகா லட்டு பெருந்தலைவர் இல்லத்தில் படைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பழனி முருகன், மாவட்ட பொருளாளர் மனோகரன் ஏற்பாட்டில் கார்த்திக் நாராயணன் அன்னதானம் வழங்கினார். எழில் நகர் நாடார் பேரவை சார்பில் காமராஜர் படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து அறுசுவை உணவு அன்னதானம் வழங்கினார்.

    • தமிழ்நாடு பனைமரத் தொழிவாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
    • பனைமரம் வெட்டுவதை தடுக்க அரசாணை வெளியிட வேண்டும்.

    தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6-வது கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கருத்தரங்கு கூடத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    கூடுதல் ஆணையர் சமரசம், வேலாம்பிகை நிதித்துறை சார்பு செயலர் ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் பொது மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் உதவி இயக்குநர் தண்ணன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய செயலாளர் மாதவன், வேலையளிப்போர் மற்றும் தொழிலாளர் தரப்பு வாரிய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்க உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கும் கண்கண்ணாடி உதவித் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக உயர்த்துவதற்கும். தமிழ்நாடு பனைமரத் தொழிவாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.

    பனைமரம் வெட்டுவதை தடுக்க அரசாணை வெளியிட வேண்டும். என்றும். பனை ஏறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும். நல வாரியத்தில் வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் குறித்து வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். முன்னதாக கிரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாநில தேசிய நலத்திட்டம் ஆகியவை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்துடன் இணைந்து மேற்கொள்ளும் "1 கோடி பனை விதை நடும் நெடும் பணி' திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    • தமிழ்நாடு சட்டமன்றத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
    • தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கவர்னர் பதவியேற்ற முதலே தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகின்றார். ஆன்லைன் தடை சட்ட மசோதாவை கிடப்பில் போட்டு காலம் கடந்து திருப்பி அனுப்பி தனக்கு தமிழ்நாட்டு மக்களின் நலனிலும், உயிரிலும் அக்கறை இல்லை என்று நிரூபித்துள்ளார்.

    இப்போது எந்த மசோதாவையும் தான் கிடப்பில் போட்டாலே அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று சொல்லியிருப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

    மேலும் தற்போது தூத்துக்குடி பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அயல்நாடுகளில் பணம் பெற்றுக் கொண்டும், அயல் நாடுகளின் தூண்டுதலின் பேரிலேதான் நடத்தினார்கள் என்று கூறியிருப்பது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகளை கவர்னர் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த கவர்னரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் சமத்துவ மக்கள்கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.
    • திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    3 மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது ஒன்றிய அரசு. இதனால் நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.

    ஏழை, நடுத்தர வர்த்தகத்தினர் மாத பட்ஜெட் மேலும் எகிரும் வாய்ப்பு உள்ளன. எனவே ஒன்றிய அரசு கேஸ் விலை உயர்வை உடனயாக திரும்பப் பெற வேண்டும். திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவொற்றியூர்:

    தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காத கவர்னரை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 3 மணி அளவில் கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தட்சிணாமாறநாடார் சங்க சென்னை இயக்குனர் என்.ஏ தங்கதுரை, ஆர் கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், திருவொற்றியூர் பகுதி முத்துக்குமார், நிர்வாகிகள், கருப்பையா, பாக்யராஜ் சுப்பிரமணி வெள்ளைச்சாமி, சேவியர், சிவகுமார், பத்மநாபன், ஸ்டாலின், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, மீனா, ஆனந்தி, அனிதா மற்றும் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • பெருந்தலைவர் காமராஜர் சீடராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவராகவும், மக்கள் நலனுக்காகவும் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.
    • தமிழுக்கும் தமிழ் பெருமைக்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்தவர்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி அரிகிருஷ்ணன்-தங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் குமரி ஆனந்தன்.

    பெருந்தலைவர் காமராஜர் சீடராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவராகவும், மக்கள் நலனுக்காகவும் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். இலக்கிய செல்வராகவும், மேடையில் தன் இலக்கிய நயம் மிக்க பேச்சால் மக்களை கவர்ந்தவர். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவராகவும் பணியாற்றியவர்.

    தமிழுக்கும் தமிழ் பெருமைக்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்தவர். தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் அவரது கோரிக்கையை முதல்வர் ஏற்று அண்ணாநகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி குமரி ஆனந்தனுக்கு பெருமை சேர்த்தார்.

    தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் டாக்டர் கலைஞர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உயிர் மூச்சாய் கடைசி காலம் முதல் பெருமை சேர்த்தாரோ, அதேபோன்று முதல்வரும் தமிழுக்கு பெருமை சேர்த்தது போல இலக்கிய செல்வருக்கு வீடு வழங்கும் அரசாணை பிறப்பித்து சிறப்பு சேர்த்துள்ளார். முதல்வருக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்.
    • போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து தரப்பினரும் நமது அலுவலகங்கள், வணிக வளாகங்கள், இல்லங்களிலும் தேசிய கொடியை வருகிற 13 ,14, 15 ஆகிய மூன்று தினங்களில் நாம் அனைவரும் தேசிய கொடியை கட்டாயம் ஏற்ற வேண்டும்.

    போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் ஒழிப்பு, மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன. பொதுமக்கள் ஆகிய நாமும் அதற்கு ஒத்துழைப்பு நல்கி போதை ஒழிப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து பனைமரத் தொழிலாளர்களையும் உறுப்பினராக்கி அவர்கள் அனைத்து நலத் திட்டங்களின் பயன்களையும் பெற வேண்டும்
    • பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட விவாதப் பொருட்களின் மீதும் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 5-வது கூட்டம் தொழிலாளர் ஆணைய ரகத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் ஏ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த 5-வது வாரியக் கூட்டத்தில் அரசு தரப்பு பிரதிநிதிகள், தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய நிர்வாக அதிகாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் ஏ.நாராயணன் பேசும் போது, "அனைத்து பனைமரத் தொழிலாளர்களையும் உறுப்பினராக்கி அவர்கள் அனைத்து நலத் திட்டங்களின் பயன்களையும் பெற வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லெண்ணத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தை புனரமைத்து வாரியத் தலைவர் நியமனம் மற்றும் பிரதிநிதிகள் நியமனம் செய்வதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தலைவரால் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    மேலும் பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட விவாதப் பொருட்களின் மீதும் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×