search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "ernavoor narayanan"

  • போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்.
  • போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன.

  சென்னை:

  சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து தரப்பினரும் நமது அலுவலகங்கள், வணிக வளாகங்கள், இல்லங்களிலும் தேசிய கொடியை வருகிற 13 ,14, 15 ஆகிய மூன்று தினங்களில் நாம் அனைவரும் தேசிய கொடியை கட்டாயம் ஏற்ற வேண்டும்.

  போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் ஒழிப்பு, மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன. பொதுமக்கள் ஆகிய நாமும் அதற்கு ஒத்துழைப்பு நல்கி போதை ஒழிப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #dmk #ernavoornarayanan

  தென்காசி:

  சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசி சவுந்தர்யா மகாலில் நேற்று நடந்தது. கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் தனுஷ்கோடி, பொதுச்செயலாளர் சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், துணை பொதுச்செயலாளர் இளஞ்சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அகரக்கட்டு லூர்து நாடார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக எர்ணாவூர் நாராயணன் உள்பட பழைய நிர்வாகிகளே மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  கூட்டத்தில், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். தென்னையில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி அளித்ததுபோல் பனையில் இருந்தும் நீரா பானம் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்திட தாமிரபரணி தூய்மை திட்டம் தொடங்க வேண்டும்.

  வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கடலோர மீனவர்கள் நலன் காக்க சாகர்மாலா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். சென்னை- கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை திட்டத்தை உடனே நிறைவேற்றி கூடுதல் ரெயில்கள் விட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதைத்தொடர்ந்து எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

  சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தோம். அதில் இருந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். மக்கள் பிரச்சினைக்காக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்துகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறோம். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.

  தமிழக அரசு கொண்டு வந்துள்ள லோக் ஆயுக்தா சட்டம் பெயரளவில் மட்டுமே உள்ளது. அதில் விதிமுறைகளை திருத்தம் செய்து வலுவான அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். வருமான வரி சோதனை நடத்தும்போது பல கோடி ரூபாய் கைப்பற்றப்படுகிறது. அதன்பிறகு அந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பது யாருக்கும் தெரிவது இல்லை. எனவே அந்த வழக்கின் விவரத்தை அடிக்கடி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை -சேலம் 8 வழிச்சாலை பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறுகிறார். அப்படி அங்கு எந்த பணியும் நடந்ததாக தெரியவில்லை. அங்குள்ள மக்களின் கருத்தை கேட்டு அதன்படி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

  மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்தி தமிழக அரசை மிரட்டி வருகிறது. பாராளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது ஆகும். சரக்கு சேவை வரியால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே அந்த வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நடிகர்கள் இனி ஆட்சிக்கு வரமுடியாது.

  இவ்வாறு அவர் கூறினார். 

  சமத்துவ மக்கள் கழகத்தின் முதல் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் வருகிற 22- ந்தேதி நடக்கிறது என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #ernavoornarayanan
  தென்காசி:

  சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சமத்துவ மக்கள் கழகத்தின் முதல் மாநில செயற்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் வருகிற 22-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் வரவு-செலவு கணக்கு, ஆண்டு அறிக்கை வாசித்தல், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் போன்றவை நடக்கின்றன. 

  மேலும் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தி தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது பற்றியும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ernavoornarayanan 
  சேலம்-சென்னை 8 வழிசாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #ernavoornarayanan #chennaisalem8wayroad

  திருப்பூர்:

  திருப்பூரில் சமத்துவ மக்கள் கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பி.என். ரோட்டில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

  பின்னர் பாண்டியன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

  திருப்பூரை பொறுத்தவரை சாயக்கழிவு நீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றினாலும், பல சிறிய அளவிலான நிறுவனங்கள் தொடர்ந்து சுத்திகரிக்காமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இதனால் சிறிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.

  மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி கொள்கையால் பல சிறு, குறு, நடுத்தர பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சேலம்-சென்னை 8 வழிசாலைக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சேலம்-சென்னை நெடுஞ்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் தற்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதற்கு பதிலாக தற்போது உபயோகப்படுத்தப்படும் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கலாம். பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தருவதாக முதல்-அமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. மக்கள் போராட்டத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

  தூத்துக்குடியிலும் இதே போன்று சாதாரணமாக தொடங்கிய போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததாலேயே இவ்வளவு பெரிய கலவரமும், உயிரிழப்பும் ஏற்பட காரணம் ஆனது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பது கடினம். தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே அமைச்சர்கள் உள்ளனர் என்றார்.

  திருப்பூர் வந்த சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு மாநில இளைஞர் அணி துணைசெயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் செல்வம், பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கலைவாளன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். #ernavoornarayanan #chennaisalem8wayroad

  ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று திருச்செந்தூரில் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். #Thoothukudifiring
  திருச்செந்தூர்:

  சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் திருச்செந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது. ஆலை நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்றால் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்படும். எனவே அரசு சட்டசபையில் ஆலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிரந்தரமாக மூடவேண்டும்.

  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அப்பாவி பொதுமக்களை சமூக விரோத கும்பல் என கூறி போலீசார் கைது செய்வதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்

  இந்த ஆலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது வெறும் கண்துடைப்பு ஆகும். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்திக்க 2 முறை அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை எனக்கு அனுமதி இல்லை.

  பெட்ரோல், டீசல் விலையில் ஜி.எஸ்.டி.யில் சேர்க்க வேண்டும். அப்போது தான் விலை குறையும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring
  ×