search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6-வது கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது
    X

    தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6-வது கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது

    • தமிழ்நாடு பனைமரத் தொழிவாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
    • பனைமரம் வெட்டுவதை தடுக்க அரசாணை வெளியிட வேண்டும்.

    தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6-வது கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கருத்தரங்கு கூடத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    கூடுதல் ஆணையர் சமரசம், வேலாம்பிகை நிதித்துறை சார்பு செயலர் ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் பொது மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் உதவி இயக்குநர் தண்ணன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய செயலாளர் மாதவன், வேலையளிப்போர் மற்றும் தொழிலாளர் தரப்பு வாரிய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்க உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கும் கண்கண்ணாடி உதவித் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக உயர்த்துவதற்கும். தமிழ்நாடு பனைமரத் தொழிவாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.

    பனைமரம் வெட்டுவதை தடுக்க அரசாணை வெளியிட வேண்டும். என்றும். பனை ஏறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும். நல வாரியத்தில் வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் குறித்து வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். முன்னதாக கிரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாநில தேசிய நலத்திட்டம் ஆகியவை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்துடன் இணைந்து மேற்கொள்ளும் "1 கோடி பனை விதை நடும் நெடும் பணி' திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×