உள்ளூர் செய்திகள்
யாக பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

காளத்தீஸ்வரர் கோவிலில் வருஷாபிசேக விழா

Update: 2022-05-07 09:50 GMT
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவில் கும்ப கலசங்கள் வைத்து கும்பபூஜை, யாகபூஜை தொடர்ந்து சுவாமி, அம்பாள், பாம்பாட்டிசித்தர்  ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News