உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

குளச்சல் அருகே தென்னை மரங்கள் வெட்டி திருட்டு

Update: 2022-05-07 08:45 GMT
குளச்சல் அருகே தென்னை மரங்கள் வெட்டி திருட்டு
நாகர்கோவில், மே.7-
குளச்சல் அருகே குளப்பாடை சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (40).இவரது சகோதரி மேரி ஸ்டெல்லா.இவருக்கு குளச்சல் கூத்தாவிளையில் சொந்தமாக 10 சென்ட் நிலம் உள்ளது.இதில் தென்னை மரங்கள் உள்ளன.

தற்போது மேரி ஸ்டெல்லா சென்னையில் வசித்து வருவதால் கூத்தாவிளை நிலத்தை பிரின்ஸ் ராஜ் கவனித்து வருகிறார். 

இந்நிலையில் சம்பவத்தன்று கூத்தாவிளை நிலத்தில் உள்ள தென்னை மரங்களில் 6 மரங்களை அப்பகுதியை சேர்ந்த சசிகுமார் மற்றும் 7 பேர் வெட்டி திருடி சென்றதாக கூறப்படுகிறது. 

இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் எனவும், தேங்காய் மற்றும் இளநீர்களின் மதிப்பு ரூ.3 ஆயிரம் எனவும் கூறப்படுகிறது. 

இது குறித்து பிரின்ஸ் ராஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சசிகுமார் மற்றும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News