உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

பூதப்பாண்டி அருகே பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவன் மாயம்

Update: 2022-05-07 08:07 GMT
பூதப்பாண்டி அருகே பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவன் மாயம்
நாகர்கோவில், மே.7-

திருவனந்தபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் ஆதில் முகம்மது (வயது 12). இவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். ஆதில் முகம்மது திட்டு விளை பழைய தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். 

வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆதில் முகம்மது திடீரென மாயமா னார். அவரை பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News