உள்ளூர் செய்திகள்
அய்யாகண்ணுவை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிய போது எடுத்தப்படம்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள், போலீசார் மோதல்

Published On 2022-05-06 10:07 GMT   |   Update On 2022-05-06 10:07 GMT
கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள், போலீசாருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருச்சி :

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனுவினை கொடுக்க முயன்றனர்.

இதையடுத்து ஐயா கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அப்போது கலெக்டர் சிறிது நேரம் காத்திருக்க கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு தரையில் அமர்ந்திருந்தனர் .
இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதற்கிடையே சில விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயில் கதவை மூட  முயன்றனர்.

இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும்  வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் போலீசார் படிக்கட்டில் படுத்த அய்யாக்கண்ணு குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். 

Tags:    

Similar News