உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்

Update: 2022-05-05 10:07 GMT
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி:

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருபாகரன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தலைவர் ஜானகிராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னாள் பொதுச் செயலாளர் வேணுகோபால் ரெட்டி வாழ்த்துரை வழங்கினார்.

இதில் இன்பசேகரன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் , ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு 100 சதவீத அகவிலைப்படி உயர்வை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதிய திட்ட பலன்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News