உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மார்த்தாண்டம் அருகே வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல்

Update: 2022-05-05 08:42 GMT
மார்த்தாண்டம் அருகே வாலிபர் வீடு புகுந்து தாக்கப்பட்டார்.
கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட முளங்குழி நெடு விளையைச் சேர்ந்தவர்   சரோஜா. இவரது மகன் சலீம்குமார் (வயது 35). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்தபோது,  மூள்ளஞ்சேரியைச் சேர்ந்த தினேஷ் (35) வீடு புகுந்து தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்து சென்ற தாக மார்த்தாண்டம் போலீ சில் புகார் செய்யப்பட்டது. 

இந்த தாக்குதலில் காயம் அடைந்த சலீம்குமார் குழித்துறை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்ப திவு செய்து தினேைச தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News