உள்ளூர் செய்திகள்
ஆண்டகளூர்கேட்டில் அ.தி.மு.க. பிளக்ஸ் கிழிக்கப்பட்டிருக்கும் காட்சி.

ஆண்டகளூர்கேட்டில் அ.தி.மு.க. டிஜிட்டல் போர்டு கிழிப்பு

Update: 2022-05-05 08:39 GMT
ஆண்டகளூர்கேட்டில் அ.தி.மு.க. டிஜிட்டல் போர்டு கிழிக்கப்பட்டது.
ராசிபுரம்: 

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் உள்ள ராசிபுரம்-திருச்செங்கோடு ரோடு பஸ் நிறுத்தம் பகுதியின் சாலையோரத்தில்  ராசிபுரம் ஒன்றிய அ,தி,மு,க, சார்பில் டிஜிட்டல் போர்டு வைத்திருந்தனர்.
 
அதை மர்மநபர்கள் யாரோ கிழித்து விட்டனர். இது அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேம்பு சேகரன்  ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரில் பிளக்ஸ் கிழித்த மர்ம நபர்கள் பற்றி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் பேனர் கிழிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News