உள்ளூர் செய்திகள்
மதுரையில் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர்.

மாணவர்கள் போலீசாரிடம் உறுதிமொழி ஏற்பு

Published On 2022-05-04 10:36 GMT   |   Update On 2022-05-04 10:36 GMT
பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்ய மாட்மாடோம் என மதுரை மாணவர்கள் போலீசாரிடம் உறுதிமொழி ஏற்றனர்.
மதுரை

மதுரை மாநகரில் பள்ளிக்கூட மாணவ-மாணவியர்கள், பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்துகள் வேகமாக செல்லும்போது மாணவர்கள் கீழே விழுவது, கை-கால்களில் பலத்த அடிபடுவது உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. 

எனவே பேருந்தில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி போக்கு வரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி மேற்பார்வை யில், தல்லாகுளம் போக்கு வரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் அடங்கிய தனிப்படை இன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டது.

 அப்போது அங்கு ஒரு அரசு பஸ் வந்தது. தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டு களில் தொங்கியபடி பயணம் செய்தனர்.  எனவே தனிப்படை போலீசார் அந்த பஸ்சை  வழி மறித்தனர். அதன் பிறகு படிக்கட்டுகளில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து அந்தபஸ் கிளம்பியது. அதன்பிறகு போக்குவரத்து போலீசார் அந்த மாணவர்களிடம் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் ஆகியவை தொடர்பாக அறிவுரை கூறினார்கள். 

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் “நாங்கள் இனிமேல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்ய மாட்டோம்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு போலீசார் அந்த மாணவர்களை இன்னொரு பேருந்தில் பத்திரமாக ஏற்றி அனுப்பிவைத்தனர்.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசாரின் வாகன கண்காணிப்பு சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
Tags:    

Similar News