உள்ளூர் செய்திகள்
தீ மிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

முசிறி மாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

Published On 2022-05-04 09:37 GMT   |   Update On 2022-05-04 09:37 GMT
முசிறி மாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருச்சி:

முசிறியில் சித்திரை மாதத்தை முன்னிட்டு நகரில் உள்ள  மாரியம்மன் கோவில்களில் கடந்த 10 தினங்களாக பால்குடம் நிகழ்ச்சி பூச்சொரிதல் விழா இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்த வண்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சியில் அம்மன் சமயபுர அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பக்தர்களின் முக்கிய வேண்டுதளான தீமிதி விழா, கள்ளர்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன், மேலத்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன், கீழத்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆகிய

கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்   அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்தி கடனை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags:    

Similar News