உள்ளூர் செய்திகள்
கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2022-05-01 10:03 GMT   |   Update On 2022-05-01 10:03 GMT
தஞ்சையில் காரில் 150 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர்  சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவுப்படி , மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன்  மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்  அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன்,  இளையராஜா, சுந்தர்ராமன், ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய  தனிப்படை போலீசார்பல்வேறு  இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஆந்நிர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விற்பனை செய்ய கார் மூலம் ஒருவர் கஞ்சா மூட்டைகள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில் அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 

அதில் ரூ.1 கோடி மதிப்புள்ள 150 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் கார், கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News