உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் மோசடி

Published On 2022-04-29 09:48 GMT   |   Update On 2022-04-29 09:48 GMT
ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்:

கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று பேஸ்புக்கில் செல்போன் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை பார்த்து லிங்கை கிளிக் செய்து அதில் இருந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொண்டு செல் போன் ஆர்டர் செய்த போது ஓமன் கஸ்டம்ஸ் மற்றும் காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறி மிரட்டி,

ஏமாற்றி ரூ 70 லட்சத்து ஆயிரத்து 900 பணம்  பெற்றதாகவும் அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டது.


இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பாதேல் டெபர்மா, ஜெதிராய் மோல்சோல், இஷாபகதூர் மால்சம் மற்றும் சுராஜித் டெபர்மா ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.


மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் பாதேல் டெபர்மா, ஜெதிராய் மோல் சோல் ஆகியோர் பெங்களூரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார பெங்களூரு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News