உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை படத்தில் காணலாம்.

பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்கக்கோரி ஆசிரியர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-26 09:54 GMT   |   Update On 2022-04-26 09:54 GMT
பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:

ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு திருமண்டல நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற 56 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு இதுவரை பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஆசிரியர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு சிறப்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார். ஸ்டெல்லா விளக்க உரை ஆற்றினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் மணிகண்டன், உலகநாதன், தென்காசி மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தேர்ச்சி பெற்ற 54 ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஒப்புதல் ஆணையை விரைந்து வழங்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News