உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய ரெயில்

9 மணி நேரப் போராட்டம் - தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்ட ரெயில்வே ஊழியர்கள்

Published On 2022-04-24 21:47 GMT   |   Update On 2022-04-24 21:47 GMT
ரெயில் விபத்திற்கான காரணத்தை மதிப்பிடுவதற்கு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெற்கு ரெயில்வே கூறியுள்ளது.
சென்னை:

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார ரெயில், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது. 

தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளைத் தொடங்கினர். ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதிர்ஷ்டவசமாக பணிமனையில் இருந்து வந்த ரெயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  

இதுதொடர்பாக, ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டது. டிரைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவித்தார். 

இந்நிலையில், 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய மின்சார ரெயிலின் பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

Tags:    

Similar News