உள்ளூர் செய்திகள்
விக்னேஷ்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

Published On 2022-04-22 15:06 GMT   |   Update On 2022-04-22 15:06 GMT
காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் விக்னேஷ் உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சென்னை:

சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் கடந்த 18ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, விக்னேஷ் என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் கத்தி, கஞ்சா போன்றவை இருந்தது. இதையடுத்து அவரையும், அவருடன் வந்த அவரது நண்பர் ரமேஷ் என்பவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

மறுநாள் காலை திடீரென விக்னேஷூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ் இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் விக்னேஷ் உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாரா? அவர் மீது வழக்குகள் ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. 

வாலிபர் விக்னேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது  குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News