உள்ளூர் செய்திகள்
சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் ரேசன் அரிசி கடத்தல்

Published On 2022-04-21 10:20 GMT   |   Update On 2022-04-21 10:20 GMT
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளவரசி சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்-பேட்டை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது சோமநாயக் கன்பட்டி ரெயில் நிலையத்தில் கர்நாடக மாநில குப்பம் பகுதிக்கு தமிழக அரசின் ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

சோமநாயக்-கன்பட்டி ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் வந்து நின்றது. அப்போது வாலிபர் ஒருவர் நின்றுயிருந்த ரெயிலில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தார். 

போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர் வெளி மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துவதாக தெரிவித்தார். அதனையெடுத்து அவரிடமிருந்த 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News