உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வாடகை கார் டிரைவர்களுக்கு போலீசார் அதிரடி உத்தரவு

Update: 2022-04-17 07:18 GMT
சந்தேகப்படும் நபர்கள், சந்தேகப்படும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து உடனே அருகேயுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர போலீஸ் தெற்கு சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாடகை ஆட்டோ, கார், வேன் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி தலைமை வகித்தார். தெற்கு சரக உதவி கமிஷனர் வரதராஜன், திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, நல்லூர், சென்ட்ரல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் பேசுகையில்:

‘வாடகை வாகன டிரைவர்களுக்கு பெரும்பாலும் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு அதிகம். சந்தேகப்படும் நபர்கள், சந்தேகப்படும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து உடனே அருகேயுள்ள போலீஸ்  நிலையங்களுக்கு தகவல் தர வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றம் குறித்து 181 மற்றும் 1098 ஆகிய எண்களுக்கு தகவல் தர வேண்டும். தங்கள் வாகனங்களில் இது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News