உள்ளூர் செய்திகள்
வீரன் சுந்தரலிங்கனார் உருவச்சிலைக்கு அரசு சார்பில் கனிமொழி எம்.பி மாலை அணிவித்த காட்சி.

ஒட்டப்பிடாரம் மணிமண்டபத்தில் வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு அரசு சார்பில் கனிமொழி எம்.பி. மரியாதை

Update: 2022-04-16 05:37 GMT
ஒட்டப்பிடாரம் மணிமண்டபத்தில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் உருவசிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
ஒட்டப்பிடாரம்:

சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் 252-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள உருவச்சிலைக்கு அரசு சார்பில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 201 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சத்து 60 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் உருவசிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

வீரன் சுந்தரலிங்கனார் நேரடி வாரிசு பொன்ராஜ், வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் முருகன், செயலாளர் தெய்வேந்திரன், மக்கள் மேம்பாட்டு கழக நிறுவன தலைவர் அதிசய குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News