உள்ளூர் செய்திகள்
விஜய் வசந்த்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்- விஜய் வசந்த்

Published On 2022-04-05 09:18 GMT   |   Update On 2022-04-05 09:18 GMT
மத்திய அரசு உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கல்வி கடன் எடுத்த மாணவர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பிய கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய்வசந்த், “உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக் கடனின் தகவலை கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு மாணவர்களின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கல்வி கடன் எடுத்த மாணவர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். மேலும் மாணவர்கள் எடுத்த கடன் தொகையின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி, 1,319 மாணவர்கள் 21 பல்வேறு வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ளதாகவும் அந்த கடன் தொகை ரூ.121.62 கோடி எனவும் தெரிவித்தார். மேலும் அரசு இந்திய வங்கி கூட்டமைப்புடன் ஆலோசனை செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News