உள்ளூர் செய்திகள்
.

சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 4 பேர் கைது

Published On 2022-03-30 07:16 GMT   |   Update On 2022-03-30 07:16 GMT
சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்:

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மர்ம நபர்கள் வந்து நாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி உள்ளனர்.

மேலும் நீங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பாதித்த பணத்தை அரசுக்கு கணக்கு காட்டாமல் மோசடி செய்துள்ளீர்கள், இதுகுறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம். எனவே நீங்கள் விசாரணைக்கு வர வேண்டும் என கூறி உள்ளனர்.

மேலும் பூபதியின் விலை உயர்ந்த 2 கார்களை எடுத்துக்கொண்ட அவர்கள், அதில் ஒரு காரில் பூபதியையும் ஏற்றிக்கொண்டு சென்றனர். அதன்பிறகு பூபதியை மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கி கொண்டு கடத்தி சென்ற அவரை விடுவித்தனர். 

இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் உடனடியாக போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில், சம்பவம் குறித்து பூபதி ஜனவரி மாதம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்தது, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (42), தென்காசி அவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ராஜேஷ் (32), சென்னை மதுரவாயல் அய்யாவு நகர் பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜாகீத் அப்பாஸ் (48), சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 4 பேரை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News