உள்ளூர் செய்திகள்
அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2022-03-29 07:57 GMT   |   Update On 2022-03-29 07:57 GMT
நன்னிலம் அருகே அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள அனைகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை தலைமையாசிரியர் குலசேகரன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ&மாணவிகள் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு முன்னிலைப்படுத்தினர்.

மாணவர் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புக்கான செயல் விளக்கங்களை பார்வையாளர்களுக்கு எடுத்து விளக்கினர். முன்னதாக உதவி தலைமையாசிரியர் மேல்நிலை சிவபாதம் வரவேற்று பேசினார்.

இதில் ஏராளமான பெற்றோர், கிராம மக்கள் பங்கேற்று மாணவியர்களின் அறிவியல் காட்சிகளை பார்த்து சென்றனர். முடிவில் உதவித் தலைமையாசிரியர் இடைநிலை சந்திரமோகன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News