உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-03-26 09:47 GMT   |   Update On 2022-03-26 09:47 GMT
குழுக்கள், கூட்டமைப்புகள் தகுதியான அனைத்து குழுக்களும் வங்கியிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.
திருப்பூர்:

தமிழக அரசு மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்புற சுய உதவி குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குகிறது. இதற்கு வாரம் மற்றும் மாதம்தோறும் கூட்டங்களை முறையாக நடத்தியிருக்க வேண்டும்.

குழுவில் சேமிக்கப்படும் தொகை, சரியான வகையில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். குழுக்கள், கூட்டமைப்புகள் தகுதியான அனைத்து குழுக்களும், வங்கியிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பயிற்சிகள் அளித்திருக்க வேண்டும்.

சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகள் ஈடுபட்டிருக்க வேண்டும். தகுதி வாய்ந்த 4 ஆண்டுகள் முடித்த சுய உதவிக்குழுக்கள், தர மதிப்பீட்டில் ‘ஏ’ அல்லது ‘பி’ தகுதியுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராமப்புற ஒழிப்பு சங்கம், நகர்புற சுய உதவிக்குழுக்கள், கூட்டமைப்புகள் மற்றும் ஓராண்டு நிறைவு செயய்த நகர அளவிலான கூட்டமைப்பினர், மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊரக பகுதிகளைச் சேர்ந்தோர், வட்டார இயக்க மேலாண்மை அவலகத்திலும், நகர்புற பகுதிகளை சேர்ந்தோர், சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வரும் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மூன்றாவது தளத்தில் இயங்கும் மகளிர் திட்ட அலுவலகத்தை 94440 94399, 0421 2971149 என்கிற எண்களில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News