உள்ளூர் செய்திகள்
மீனவர்களுக்குசெயற்கைகோள் தொலைபேசிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.

மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்வழங்கினார்

Published On 2022-03-26 09:38 GMT   |   Update On 2022-03-26 09:38 GMT
மீனவர்களுக்கு அரசு மானியத்தில் செயற்கைகோள் தொலைபேசிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம்  தருவைகுளம் கடற்கரையில் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு தொழில்நுட்பம், திட்டத்தின் மூலம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மீனவர் களுக்கு அரசு மானியத்தில் செயற்கைகோள் தொலைபேசி களை அவர் வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ், மீன்வளக்கல்லூரி துணை வேந்தர் சுகுமார்,  ஓட்டப் பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும்  தலைமை செயற்குழு உறுப் பினர்  ஜெயக்குமார் ரூபன், முன்னாள் தலைமை செயற் குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கார், தருவைகுளம் பஞ்சாயத்து தலைவர் காடோடி, மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி,  அனிஸ்டன், அரசு அலுவலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News