உள்ளூர் செய்திகள்
ஆசிரியை வடிவமைத்த குறுகிய குறள் புத்தகம்.

3.5 சென்டிமீட்டர் நீளம், 3.5 சென்டி மீட்டர் அகலத்தில் குறுகிய குறள் புத்தகம் வடிவமைத்த பள்ளி ஆசிரியை- புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்

Published On 2022-03-22 10:07 GMT   |   Update On 2022-03-22 10:07 GMT
பாளை வ.உ.சி.மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் 3.5 சென்டிமீட்டர் நீளம், 3.5 சென்டி மீட்டர் அகலத்தில் வடிவமைத்த குறுகிய குறள் புத்தகத்தை பள்ளி ஆசிரியை காட்சிப்படுத்தினார்.
நெல்லை:

பாளை வ.உ.சி.மைதானத்தில் புத்தக திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் இருந்து 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து கண்காட்சியை காண கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மொத்தமாக வாகனங்களில் அழைத்து வரப்பட்டு கண்காட்சியை கண்டுகளிக்கின்றனர்.

புத்தக கண்காட்சியை யொட்டி தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. 6-வது நாளான இன்று அரசு அருங்காட்சியகம் சார்பில் வாழைநார் மூலம் அழகிய கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழைநார் மூலம் அழகிய விளக்குத்துணி, தேங்காய் ஓடு, கிண்ணங்கள் போன்ற கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி பகுதியை சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியை பொன்ரேகா என்பவர் உலக சாதனை முயற்சியாக 3.5 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 3.5 சென்டி மீட்டர் அகலம் கொண்ட குறுகிய குறள்  புத்தகத்தை வடிவமைத்துள்ளார்.

18 நாட்களில் வடிவமைக்கப்பட்ட இந்த குறுகிய புத்தகத்தில் 1,330 குறளையும் எழுதியிருந்தார். அந்த புத்தகத்தை இன்று கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.  இதனையும் ஏராள மான மாணவ-மாணவிகள் கண்டு ரசித்தனர்.
Tags:    

Similar News