உள்ளூர் செய்திகள்
பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்த காட்சி.

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

Published On 2022-03-19 09:36 GMT   |   Update On 2022-03-19 09:36 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. 

இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தின் போது பள்ளிகளில் குழந்தை திருமணம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்தது. எத்தனை இருக்கின்றன என்பதனை அடுத்த ஆய்வு கூட்டத்தின்போது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கழிவறை வசதி சுகாதார முறையில் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

அனைத்து பள்ளிகளிலும் நூலகங்கள் இருக்கின்றதா என்பதையும் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி துறை) மகேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் (கட்டிடங்கள்), ரூபேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி, மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News