உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொடைக்கானல் வனப்பகுதியில் தீ வைத்தால் 7 ஆண்டு சிறை

Published On 2022-03-16 09:16 GMT   |   Update On 2022-03-16 09:16 GMT
கொடைக்கானல் வனப்பகுதியில் தீ வைத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்
கொடைக்கானல்:

குறிப்பாக தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பற்றிய காட்டுத்தீயின் காரணமாக புகை மண்டலம்  ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பல பகுதிகளில் பரவிய காட்டுத்தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் கூறியதாவது:

வனப்பகுதியில் 15 இடங்களில் சுமார் 29 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. இதனிடையே தீ விபத்து ஏற்படாமல் தடுக்க பல்வேறு இடங்களில் பணிபுரியும் 150 பணியாளர்கள் மற்றும் தீத்தடுப்பு ஊழியர்கள் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தீ விபத்து குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை வனத்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

தனியார் பட்டா நிலங்களில் தீ வைப்பதால்  வனப்பகுதிக்கு பரவி வருகிறது. எனவே பட்டா மற்றும் வன நிலங்களுக்கு இடையே தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் சாட்டிலைட் மூலம் தீ விபத்து ஏற்படுவது கண்டறியப்படுகிறது. இதற்காக இந்திய வனக்கணக்கெடுப்புத்துறை என்ற அமைப்பின் கீழ் தீ விபத்து ஏற்பட்டவுடன் அறிந்துகொள்ளும் தகவல் தொழில்நுட்பம் அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News