உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

திருவண்ணாமலையில் உரத்தட்டுபாட்டை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Update: 2022-03-10 09:33 GMT
திருவண்ணாமலையில் உரத்தட்டுபாட்டை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், அரசு நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் ஒருமூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை பணம் வசூலிப்பதை கண்டித்தும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளை கண்டித்தும் பா.ஜ.க.சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீவானந்தம், பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலாளர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம் கோட்ட விவசாய அணி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
Tags:    

Similar News