உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கடையநல்லூர் அருகே வாலிபர் திடீர் சாவு

Published On 2022-03-06 09:58 GMT   |   Update On 2022-03-06 09:58 GMT
கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வாலிபர் திடீரென பலியானார்.
நெல்லை:

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கும், நிஷா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இசக்கிமுத்துவுக்கு கடந்த 3 நாட்களாக நெஞ்சுவலி இருந்துள்ளது. நேற்று அதிகமாக நெஞ்சு வலிப்பதாக கூறிய அவரை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News