உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா முயற்சியை முறியடிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2022-03-05 04:13 GMT   |   Update On 2022-03-05 05:03 GMT
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு மத்திய அரசு காவிரி -மேகதாது பிரச்சினையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில சட்ட மன்ற நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கியி ருப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி யிருக்கிறது. 

தமிழக அரசு இவர்களின் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து, அவற்றை முறியடிக்க வேண்டும். தமிழக மக்களின், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு மத்திய அரசு காவிரி -மேகதாது பிரச்சினையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News