உள்ளூர் செய்திகள்
ஜெயில் தண்டனை.

ஆசிரியருக்கு 13 ஆண்டு ஜெயில்

Published On 2022-03-04 11:38 GMT   |   Update On 2022-03-04 11:38 GMT
பெண் போலீஸ் தற்கொலை வழக்கில் ஆசிரியருக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
மதுரை

மதுரை பேரையூர் சலவை தொழிலாளர் தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 37). இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்தார். இவரது கணவர் கருப்பையா என்ற சுரேஷ் மற்றும் மகன் மணிகண்டன், மகள் ஓவியாவுடன் சின்ன ரெட்டியப்பட்டியில் வசித்தார்.

கருப்பையா ஆரம்பப்பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் அடிக்கடி ராணியிடம் ‘உன், தாய்&தந்தையிடம் வீடு கட்டுவதற்கு பணம் வாங்கிவா, சம்பளப்பணம், ஏ.டி.எம். கார்டை என்னி டமே தர வேண்டும்‘ என்று துன்புறுத்தினார்.

மகள் ஓவியா ஊனமுற்ற குழந்தை ஆவார். இதனை காரணம் காட்டி ராணியின் மாமனார் இருளப்பன், மாமியார் கூடம்மாள், சின்ன மாமியார் முத்தம்மாள் ஆகியோர் தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் ராணிக்கு பல் வேறு நெருக்கடிகளை கொடுத்தனர்.

எனவே பேரையூரில் உள்ள பெற்றோர் வீட்டில் ராணி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ராணி கடந்த 2013-ம் ஆண்டு ஊனமுற்ற குழந்தை ஓவியாவுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேல் விசாரணை செய்து குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் 2வது குற்றவாளியான ராணியின் மாம னார் இருளப்பன் இறந்து விட்டார்.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘ராணியின் கணவர் கருப்பையாவிற்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார். கருப்பையாவின் தாயார் கூடம்மாள், சின்ன மாமியார் முத்தம்மாள் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காவேரி சாந்தி  ஆஜரானார்.
Tags:    

Similar News