உள்ளூர் செய்திகள்
விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-02-28 09:56 GMT   |   Update On 2022-02-28 09:56 GMT
தஞ்சையில் விவசாய சங்கம், சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு, பொருளாளராக அபிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மார்ச் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

 இதில் சி.பி.எம் பொருளாளர் மனோகரன், மாநகர செயலாளர் வடிவேலன், மாநகர குழு குருசாமி, சி.ஐ.டி.யூ அன்பு, நீதி, பேர்நீதிஆழ்வார், ராஜாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News