உள்ளூர் செய்திகள்
விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

தாராபுரம் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை

Published On 2022-02-26 10:13 GMT   |   Update On 2022-02-26 10:13 GMT
விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தென்தாரை ஸ்ரீ, சின்னக்காளி காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு 9ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை சின்ன காளியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. 108 குத்துவிளக்கு பூஜைக்கு ராஜா என்ற கோவிந்தசாமி தலைமை வகித்தார். 

நெல்லை லாலா ஸ்வீட்ஸ் முத்துக்குமார் பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வ. உ. சி. பேரவைத்தலைவர் உலகநாதன், மணிகண்டன், சிவா, கார்த்தி, பாலு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் .

குத்துவிளக்கு பூஜையில் உலகில் அன்பு, அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும் அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டிபஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News