உள்ளூர் செய்திகள்
பெரிய பள்ளிவாசலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2022-02-13 06:48 GMT   |   Update On 2022-02-13 06:48 GMT
கடையநல்லூர் செய்யது மக்தூம் ஜிஹானி ஜிஹாங் கஷ்த் வலியுல்லாஹ் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.
கடையநல்லூர்:

 தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பிரசித்திபெற்ற  செய்யது மக்தூம் பெரியபள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி பிறை கொடி ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து முதல் பிறை கொடியேற்றம் நடைபெற்றது.முதல்பிறை கொடியை  கடந்த  100 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை தலைமுறையாக மாடசாமி  குடும்பத்தினர் செய்து வருகின்றனர் சந்தனம் பூசும் நிகழ்ச்சியை ஆசாரி சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

10-வது நாள் நேற்று மதியம் அலங்கரிக்கப்பட்ட யானையில்  பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடையநல்லூரில் உள்ள பேட்டை, ரஹ்மானியாபுரம் பெரிய தெரு, புதுத்தெரு, பஜார் ரோடு, தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணாபுரம், உட்பட பல்வேறு இடங்களுக்கு யானை மீது பச்சை களை ஊர்வலமும் சந்தனக் கூடும்  நடைபெற்றது.

தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தாரே தக் பீர் தீன் ஒலி முழங்க கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து  ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு சந்தனம் பூசுதல் நடைபெற்றது.

 இன்று இரவு 7 மணிக்கு தீப உற்சவம் நடைபெறும். நாளை மாலை 5 மணிக்கு மௌலூது சரிப் நடைபெறும் செவ்வாய்க்கிழமை பகல் மௌதூது ஓதி  அனைத்து பக்தர்களுக்கும் தப்ரூக் என்னும் நேர்ச்சை வழங்கப்படும்.

 இதற்கான ஏற்பாடுகளை தர்கா பரம்பரை  இனாம்தார் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் உட்பட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News