உள்ளூர் செய்திகள்
பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு பெட்டி

அனைத்து பள்ளிகளிலும் மாணவர் புகார் பெட்டி

Published On 2022-02-01 08:32 GMT   |   Update On 2022-02-01 08:32 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு என்னும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது
திண்டுக்கல்:

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பள்ளிகள் முன்பும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘‘மாணவர் மனசு’’ என்ற பெட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி திண்டுக்கல்லில் அனைத்து பள்ளிகளிலும் இந்த பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த பெட்டியில் புகாராக அளிக்கலாம். 2 நாட்களுக்கு 1 முறை இந்த பெட்டி திறக்கப்பட்டு அதில் புகார் அளித்துள்ள மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். இது குறித்து வேறு யாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட மாட்டாது. குறிப்பாக யார் மீது புகார் அளிக்கிறோம் என்ற விபரம் வெளியே தெரியாது.

பள்ளி ஆசிரியர்களால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, மன நல கவுன்சிலிங் ஆகியவை குறித்தும் மாணவர்கள் புகார் அளிக்கலாம். இது தவிர தங்கள் வீடுகளில் கல்விக்கு இடையூறாக ஏற்படும் பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் குறித்தும் புகாராக அளித்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும்  இந்த பெட்டி வைக்க வேண்டும் என சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதால் இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:    

Similar News