உள்ளூர் செய்திகள்
போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

திருவாரூர் மாவட்டத்தில் 282 வாக்குச்சாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-கலெக்டர் அறிவிப்பு

Update: 2022-01-29 07:16 GMT
திருவாரூர் மாவட்டத்தில் 282 வாக்குச்சாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-நடக்க உள்ளது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் - நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2022 தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கைகள் 28.1.22 அன்று வெளியிடப்பட்டு இதற்கான வேட்புமனு தாக்கல் 28.1.22 அன்று துவங்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 4.2.22 ஆகும். 

பெறப்பட்ட வேட்பு மனுக்கள் 5.2.22 அன்று ஆய்வு செய்யப்படும். 7.2.22 அன்று வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 19.2.22 அன்று நடைபெறும்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணியுடன் முடிவடையும். இதில் கடைசி ஒரு மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 

வாக்கு எண்ணிக்கை 22.2.22 அன்று காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடவடிக்கைகள் 24.2.22 அன்று முடிவடைகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் 
282 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 

இதில் 9.12.21 அன்று வெளியிடப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலின்படி 1 லட்சத்து 6 ஆயிரத்து 434 ஆண் வாக்காளர்களும், 
1 லட்சத்து 16 ஆயிரத்து 27 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவு பகுதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அமலில் இருக்கும்.

மேற்கண்ட விபரப்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திட விரும்புவோர் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திடலாம் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன சோதனை, அரசியல் விளம்பரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News