உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

தனியார் நிறுவனத்தில் ரூ. 1.70கோடி மோசடி - பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு

Update: 2022-01-29 06:33 GMT
தனியார் நிறுவனத்தில் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர்:

கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 39). இவர் கரூரில் ரசாயன தொழிற்சாலை வைத்துள்ளார். இந்நிலையில் ஈரோட்டில் ஒரு ஜவுளி நிறுவனத்தை நடத்தி வரும் விஷ்வா, லதா, மோகன்ராஜ், சிபிராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து, கனகராஜிக்கு சொந்தமான ரசாயன நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 70 லட்சத்திற்கு கெமிக்கல் வாங்கியுள்ளனர்.

இதுவரை இதற்கான பணத்தை தராமல் உள்ளதாகவும், மேலும் கனகராஜ் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் வகையில் போலி ஆவணங்களை தயாரித்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கனகராஜ் கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News