உள்ளூர் செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே 3 பேருக்கு அடி உதை- ஒருவர் கைது

Update: 2022-01-28 13:48 GMT
திருவள்ளூர் அருகே 3 பேருக்கு அடி உதை விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த தென் காரணி கோட்ரஸ் தெருவை சேர்ந்தவர் லலிதா. இவரது மகன் விமல் குமார். இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 38) என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதை கண்டு தடுக்க வந்த அவரது தாயார் லலிதாவையும் மற்றும் உறவினர் விஜயலட்சுமியையும் அவர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து லலிதா கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யப்பனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News