உள்ளூர் செய்திகள்
மேலும் ஒருவர் கைது

கோவை ஆலயத்தில் செபஸ்தியார் சிலை சேதம்: மேலும் ஒருவர் கைது

Published On 2022-01-28 10:17 GMT   |   Update On 2022-01-28 10:17 GMT
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலயத்தில் புகுந்து மர்மநபர்கள் செபஸ்தியார் சிலையை சேதப்படுத்தினர்.
கோவை:

கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின்  வாயிலில் இருந்த புனித செபஸ்தியார் சிலையை கடந்த 23-ந் தேதி நள்ளிரவில் சேதப்படுத்தபட்டது. மோட்டார் சைக்கிள் வந்த மர்மநபர்கள் செபஸ்தியர் சி¬ லயை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்  தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து   தேவாலயத்தில் உள்ள சிலை மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. 

இதனையடுத்து ராமநாதபுரம் பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு காமிராக் களின் பதிவுகளை கொண்டு போலீசார்  விசாரணை நடத்தியதில்  இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த தீபக், மதன்குமார், மூர்த்தி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் தேவாலயத்தின் சிலை  மீது தாக்குதலில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன்  மற்றும் மதன்குமார் ஆகிய 2 பேரை நேற்று முன் தினம்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சிலையை சேதப்படுத்திய இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி தீபக் என்பவரை  இன்று  தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட தீபக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி  அவரை சிறையில் அடைத்தனர்.  இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள   சேர்ந்த மூர்த்தி என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News