உள்ளூர் செய்திகள்
சாலை பணி தொடங்கிய போது எடுத்த படம்.

சமத்துவபுரத்தில் ரூ.39 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி

Published On 2022-01-28 09:34 GMT   |   Update On 2022-01-28 09:34 GMT
ராமபுரம் பஞ்சாயத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ரூ.39 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி:

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமபுரம் பஞ்சாயத்தில் உள்ள லட்சுமிபுரம் சமத்துவபுரத்தில் ரூ.39 லட்சம் செலவில் புதிதாக பிளாஸ்டிக்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் அருண்காந்த், ராமபுரம் பஞ்சாயத்து தலைவி நீலா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜகோபாலன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஷ்,

 ராமபுரம் ஊராட்சி அலுவலக செயலாளர் டேனியல், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வனஜா, சொர்ணம், ஒப்பந்ததாரர் பாஸ்கர், ராமபுரம் ஊராட்சி முன் னாள் தி.மு.க. செயலாளர் ஜோசப் செல்வதாஸ், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், குலசேகரன் புதூர் கிளை செயலாளர் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News