உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.41 கோடி

Published On 2022-01-27 02:45 GMT   |   Update On 2022-01-27 02:45 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்தில் 940 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 184 கிராம் வெள்ளியும், 87 வெளிநாட்டு நோட்டுகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருச்செந்தூர் :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மாதந்தோறும் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகின்றன. இந்த மாத (ஜனவரி) உண்டியல் நேற்று முன்தினம் கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், தூத்துக்குடி உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அறநிலையத்துறை ஆய்வர்கள் செந்தில்நாயகி, இசக்கிசெல்வம், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி ஓதுவார், மோகன், சிவகாசி பதினென்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரத்து 951 காணிக்கையாக கிடைத்தது. மேலும், இந்த மாதத்தில் 940 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 184 கிராம் வெள்ளியும், 87 வெளிநாட்டு நோட்டுகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News