உள்ளூர் செய்திகள்
பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் அஷ்டமி பூஜை

Update: 2022-01-26 09:56 GMT
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்த வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி ரவிநாரயணன், சரஸ்வதி, ஈஸ்வரி ஆகியோர் செய்தனர்.
Tags:    

Similar News