தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குபோட்டு பெயிண்டர் தற்கொலை
பதிவு: ஜனவரி 25, 2022 13:16 IST
.
தருமபுரி:
தருமபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவரது மகன் ரவிசந்திரன் (வயது39). பெயிண்டரான இவர் மாலை நேரங்களில் டிபன் கடையில் வேலை பார்ப்பது வழக்கம். இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரவிசந்திரன் டிபன் கடைக்கு செல்லவில்லை. பின்னர் இரவு 7 மணி அளவில் அவர் வீட்டில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த ரவிசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.