உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பச்சை மிளகாய் அறுவடை தீவிரம்

Published On 2022-01-24 10:43 GMT   |   Update On 2022-01-24 10:43 GMT
வடகிழக்கு பருவ மழை சீசனில் அதிக மழை காரணமாக பச்சை மிளகாய் சாகுபடி பாதித்தது .
உடுமலை

உடுமலை சின்னவீரம்பட்டி, மலையாண்டிபட்டினம், குட்டிய கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் கிணற்றுப் பாசனத்துக்கு பரவலாக பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடிக்கு விதைகள் நடவை தவிர்த்து நாற்றுகளை வாங்கி நடவு செய்கின்றனர் .சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழை சீசனில் அதிக மழை காரணமாக பச்சை மிளகாய் சாகுபடி பாதித்தது. உடுமலை சந்தைக்கு வரத்து குறைந்தது . இதனால் ஒட்டன்சத்திரம் சந்தை , கேரளாவுக்கு அனுப்புவது பாதிக்கப்பட்டது.
உற்பத்தி இல்லாததால் விலை கிலோ ரூபாய் 120 அளவுக்கு அதிகரித்தது. பருவமழைக்கு பிறகு நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் தற்போது பச்சை மிளகாய் அறுவடை துவங்கி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
எனவே அதிகப்படியாக இருந்த விலை குறைந்து  தற்போதைய நிலவரப்படி தரத்தின் அடிப்படையில் கிலோ ரூபாய் 60 வரை கிடைத்தது. கேரளாவுக்கு அனுப்ப வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,  கடந்த மாதத்தை விட குறைந்தாலும் தற்போது கிலோவுக்கு 60 ரூபாய் என கட்டுபடியாகும் விலை கிடைத்து வருகிறது. வரத்து அதிகரித்தால் விலையில் மாற்றம் ஏற்படலாம் எனக்கூறினர்.

Tags:    

Similar News